மாற்றம்

பாகவதரை மாற்றிய பயணி
தங்க விக்ரகமாகவே எம்.கே. தியாகராஜ பாகவதர் எப்போதும் காட்சியளிப்பார்.  விரல்களில் மின்னும் வைர மோதிரங்கள், காதிலே ஜொலித்த தங்கப்பேனா, வைரக்கடுக்கன் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை ஆகியவற்றோடு இயக்குநர் கே. சுப்பிரமணியத்துடன் பாகவதர் தொடர்வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்.
எதிரே ஒரு வங்காளி இளைஞனும் அவரது மனைவியும் இருந்தனர்.  பாகவதர் தொடர் வண்டியில் ஏறும்போது அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்தாள்.  தீடீரென எழுந்தவள் பாகவதரின் தங்கக் கோலத்தைக் கண்டு அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினாள்.  தன் கணவரின் காதில் ஏதோ கூறிவிட்டு  மீண்டும் சிரித்தாள்.  சும்மா இரு என்று அவள் கணவன் அவள் சிரிப்பை அதட்டி நிறுத்தினான்.
பக்கத்திலிருந்த சுப்பிரமணியம் அந்த இளைஞனிடம் இவர் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நடிகர், அவரைப் பார்த்து உங்கள் மனைவி ஏன் சிரிக்கிறார்?”  என்று வருத்தத்தோடு கேட்க, அந்த இளைஞன் மன்னிக்க வேண்டுகிறான்.  சுப்பிரமணியம் விடவில்லை.  ”மன்னிப்பு இருக்கட்டும், அவள் சிரித்ததன் காரணத்தை அறிய விரும்புகிறோம்என்று கூற,
நம் ஊர்ப் பெண்கள் கூட இவ்வளவு நகை அணிவதில்லையே! இந்தப் பாகவதர் இப்படி நகையை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்துள்ளாரே! என்று மனைவி கூறியதை இளைஞன் தயக்கத்தோடு விளக்கினான்.
அந்த இளைஞரின் சொற்கள் பாகவதரைச் சுருக்கென்று தைத்தன.  உடன் தன் வைரக் கடுக்கன், கைவிரல் மோதிரங்கள், கழுத்துச் செயின்களைக் கழற்றி ஒரு கைக்குட்டையில் முடிந்து உள்ளே வைத்துவிட்டுச் சொன்னார்.
அந்தப் பெண் மீது எனக்குக்கோபம் ஏதுமில்லை.  மிகச் சாதாரணப் புடவையில் நெற்றிக் குங்குமத்தோடு சரஸ்வதி அம்பாளாகவே திகழும் அவள் கூறியது சாட்சாத் கலைமகளின் சொற்களே“  என்று சொல்லிய எம்.கே.டி. அன்றோடு  நகைகள் அணிவதை விட்டுவிட்டார்.
பாகவதரின் உயர் பண்பு
மற்றவர் கருத்துக்களில் நியாயம் இருந்தால் தன் தவற்றை உடனே திருத்திக் கொள்ளும் உயரிய பண்பினை எம்.கே.டி.யிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது.
நகைக்கு ஆபத்து வந்தது போல் அவர் அணிந்திருந்த பட்டு வேட்டி, பட்டுச்சட்டைக்கும் தீரர் எஸ். சத்தியமூர்த்தியின் மூலம் சவால் வந்தது.
சத்திய மூர்த்தி தந்த கதராடை
பாகவதரின்திருநீலகண்டர்படம் 25 வாரங்கள் தாண்டி வெற்றிகரமாய் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழாக் கண்டது.  வெற்றி விழாவின் சிறப்பு விருந்தினராகப் பாகவதர், தீரர் சத்தியமூர்த்தியை அழைத்தார்.
விழாவுக்குச் சத்தியமூர்த்தி வந்தார்.  பாகவதரின் பாடல் பற்றி, நடிப்பு பற்றிப் பாராட்டுரை தந்தார்.  தமக்குப் பாகவதர் அணிவித்த மலர் மாலையைக் கழற்றிப் பாகவதருக்கே மீண்டும் அணிவிக்கப் போனார்.
பாவதர் தலைகுனிந்து மாலையை ஏற்க முனைந்தார்.  கழுத்தில் அணிந்திருந்த பட்டு நேரியல் நழுவி கீழே விழுந்தது.  குனிந்து அதை எடுக்கப் பாகவதர் முயன்றார்.
பாகவதர் அவர்களே! இன்றோடு இந்தப் பட்டுச் சட்டையையும் பட்டு அங்கவஸ்திரத்தையும் விட்டு விடுங்கள்! விழுந்ததை எடுக்க வேண்டாம்.  இன்று முதல் இந்தக் கதர் ஜிப்பாவையும், கதர் அங்கவஸ்திரத்தையும் அணியுங்கள்.  மகாத்மாவின் நெறிப்படி வாழுங்கள்.“  என்று தீரர் சத்திய மூர்த்தி சொல்ல, திருநீலகண்டர்  வெற்றி விழாவோடு பட்டு அவரை விட்டுப் போனது ; வாழ்நாள் முழுக்கக் கதராடை அணிந்த லட்சிய நடிகராகப் பாகவதர் மாறினார்.
ஒரு விநாடியில் நடைபெறும் தற்செயலான நிகழ்வுகள் நம் வாழ்வில் புதிய வரலாற்றை எழுதக் கூடும் என்பதற்குப் பாகவதரின் வாழ்வில் நடைபெற்ற இரு நிகழ்வுகளைச் சான்றுகளாகக் கொள்ளலாம்.
பாகவதர் சுதந்திர தாகம் மிக்க மனிதராக, மகாகவி பாரதியார் மீது, தேசப்பிதா மகாத்மா காந்திஜி அவர்கள் மீது, பற்றுடைய மனிதராகத் திகழ்ந்ததற்குப் பாகவதர் பாடிய நான்கு தனிப்பாடல்களே சான்று.  
பாரதியும் பாகவதரும்
பாருக்குள்ளே நல்லநாடு எங்கள் பாரதநாடுஎனும் பாடல் பெரும் புகழ் பெற்றது.  தேசம் மீது பாகவதர் கொண்டிருந்த பற்றினை அழகாக விளக்கியது.
   பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு
    ஞானத்திலே பரமோனத்திலே உயர்
    வானத்திலே அன்னதானத்திலே
    கானத்திலே அமுதாக நிறைந்த
    கவிதையிலே உயர்நாடுஇந்த
    தீரத்திலே படை வீரத்திலேநெஞ்சில்
    ஈரத்திலே உபகாரத்திலே
    சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு
    தருவதிலே உயர்நாடுஇந்த
    யாகத்திலே தவயோகத்திலேதணி
    யோகத்திலே பல யோகத்திலே
    ஆதத்திலே தெய்வ பக்தி கொண்டார்தம்
    அருளிலே உயர்நாடு.
மகாத்மா காந்திஜி மீது பேரன்பு கொண்ட பாகவதர், உலகின் மாஞானிகளோடு மகாத்மாவை ஒப்பிட்டுப் பாபநாசம் சிவனைப் பாடல் எழுதச் சொல்லி, தன் குரலில் பாடி மகிழ்ந்தார்.
    காந்தியைப் போல் ஒரு சாந்த சொரூபனைக்
    காண்பதும் எளிதாமோமகாத்மா
    மாந்தரிலே ஞானயோகம் மேவும்
    வேந்தரிலே சுயநலம் சிறிதும் இல்லா
    அஹிம்சை தனிலே புத்தர் அவர்ஆத்மா
    சோதனையிலே ஏசுநாதர் அவர் அது
    பகையும் வென்ற கர்மதீரர் அவர்.  நம்
பாக்கியத்தால் இந்த இந்திய நாட்டில் அவதரித்த
குழந்தையுள்ளமும் அன்புகனிந்த மொழியுங் கொண்டு
கொடுமைகளை எதிர்த்து வெல்லும் சித்தன்
முழங்கால் துணியும் மோகனப் புன்னகையும்
தவழப் பகைவரும் கண்டஞ்சும் சுத்தன் இனிமேல்
எனும் பாடல் எம். கே.டி.யின் தனிப்பாடல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
1934ஆம் ஆண்டுபவளக்கொடிஎனும் தனது முதல் படத்தில் நடிக்க பாகவதர் வாங்கிய ஊதியம் ஆயிரம்.
ஏழே ஆண்டுகளில், 1941-ல் உலகப்போர் மூர்க்கமாக நடந்து கொண்டிருந்த காலத்தில் வெளியானஅசோக்குமார்படத்தில் நடிக்கப் பாகவதர் வாங்கிய ஊதியம் நூறு மடங்கு உயர்ந்து ஒரு லட்சமாய் எட்டியது.
தான் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமானால் பாபநாசம் சிவன் தான் பாடல் எழுத வேண்டும்.  இளங்கோவன்தான் வசனம் எழுத வேண்டும் என்று ஆணையிட்ட மாநடிகர் எம்..கே.டி.
தன்னோடு பின்னணி பாடப் பாகவதர் புது முகங்களை அறிமுகப்படுத்தினார்.  பாடகி எம்.எல். வசந்தகுமாரியும் சூலமங்கலம் ராஜலட்சுமியும், எம்.கே. தியாகராஜ பாகவதர் அறிமுகம் செய்து பின்னாளில் பெரும்புகழை ஈட்டிய தேன்குரல்கள் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்களை அடையாளம் கண்டு வாய்ப்புத் தந்தவர் எம்.கே.டி.
மிதிவண்டியில் கச்சேரிக்கு வந்த பாகவதர்
அகில இந்திய வானொலியின் மீது மட்டற்ற அன்பைப் பொழிந்தவர் எம்.கே.டி. உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்... திருச்சி வானொலியில் இரவு 7.15 மணிக்கு ஒலிபரப்பாகும் செய்தி அறிக்கையை மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு கேட்டுக் கொண்டிருப்பார்கள்.  செய்திகள் முடிந்தவுடன் 7.30 மணிக்கு பாகவதரின் கச்சேரிக்கு நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
இன்றுள்ளது போல் முன்பே ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பும் வழக்கம் அன்று இல்லை.  இரவு 7.30க்கு ஒலிபரப்ப வேண்டும்.  7.25 வரை எம்.கே.டியைக் காணோம்.  நிலைய இயக்குநர் சங்கரன் பதைபதைத்துப் போனார்.  நிகழ்ச்சி ஒலிபரப்பாகவில்லை என்றால், ஆவலோடு செய்தியைக் கேட்டுப் பாகவதரின் பாடலை நேயர்கள் கேட்க முடியாமல் ஏமாற்றம் அடைவார்களே! எனப் பதறினார்.
நிகழ்ச்சி தொடங்க மூன்று நிமிடத்திற்கு முன் வேகமாகச் சைக்கிளில் வந்து எம்.கே.டி. இறங்கினார்.  “ரயில்வே கேட் போட்டுவிட்டதால், நடந்தே அதைக் கடந்து, மறுபக்கம் வாடகை சைக்கிள் எடுத்து அழுத்தி வந்து சேர்ந்ததாக பாகவதர் கூறியதைக் கேட்டுத் திருச்சி வானொலி நிலைய இயக்குநர் சுந்தரம் மலைத்துப் போனார்.  ஒரு நிமிடத்திற்கு முன் அறிவிப்பைத் தந்த பின் 7.30 மணிக்கு வானொலியில் எம்.கே.டி பாடத் தொடங்கினார்.
வானொலி நேயர்கள் மீதும், தொழில் மீது கொண்ட பக்தியாலும் திரையுலக சூப்பர் ஸ்டார் சைக்கிளில் வந்து திரை இசை வழங்கினார் என்றால் என்னென்பது! ஹரிதாஸ்எனும் திரைக்காவியம்.
1944-ஆம் ஆண்டு எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்விலோர் திருநாளாய்ஹரிதாஸ் வெளியானது.  அக்டோபர் 16, 1944 இல் வெளியான ஹரிதாஸ் மூன்று தீபாவளிகளைக் கடந்து 110 வாரம் ஓடி இறவாப் புகழ் பெற்றது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற கொடுமையான காலம்.  11 ஆயிரம் அடிகளுக்கு மேல் திரைப்படம் எடுக்கப் பிலிம் இல்லை என்ற நிபந்தனையோடு வரையரைக்குள் எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம்ஹரிதாஸ்
நல்லவராகவும், இறைபக்தி உடையவராகவும், நடித்து வந்த பாகவதர் முற்றிலும் எதிர்நிலையில், மது அருந்துபவராக, பெண் பித்தராக, பெற்றோரை வெறுப்பவராக நடித்தார்.  படத்தின் இரண்டாம் பாதியில் முனிவரின் சாபத்திற்கு ஆளாகிக் கால்களை இழந்து, மனம் திருந்திப் பெற்றோரின் பாதங்களைச் சரண்டைபவராக பக்திமானாக மாறும் வகையில் நடித்தார்.
வாழ்விலோர் திருநாள்இன்றே
மான்விழி மடவார் கும்பல் வீதிகளெங்கும்
கண்ஜாடை செய்யும் பெண் இவள் பார்வை
காமன் மலர்க்கணை தானோ
விரைவொடு செலும் என் மனமிவளோடு
தெருவென நினையாதேனோ
முகிலோ மயிலின் தோகையிதாமோ
என்று பாடிக் கொண்டே வெள்ளைக் குதிரையின் மீது எம்.கே.டி பாகவதர் வந்த முதல் காட்சியில் அரங்கம் அதிர்ந்தது.  பாகவதரின் மனைவியாகக் கர்நாடக இசைப்பாடகி என்.சி. வசந்த கோகிலமும், ரம்பையாக டி.ஆர். ராஜ குமாரியும் நடித்தனர்.
மன்மதலீலையை... பாடல்
முதல் காட்சியான வெள்ளைக் குதிரையேறிப் பாகவதர் இளம் பெண் பண்டரிபாயைத் துரத்திக் கொண்டுவரும் காட்சி அமைப்பு அருமையாக அமைந்தது.  ஹரிதாசின் வெற்றிக்குக் காரணம் பாபநாசம் சிவன் எழுதிய
மன்மதலீலையை வென்றாருண்டோ எனும் காவியப் புகழ் பெற்ற அருமையான பாடல்.
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என் மதி மயங்கினேன்
என்ற வரிகளைப் பாகவதர் பாடியபோது திரையரங்கு ரசிகர்கள் எழுந்து நின்று கரஒலி எழுப்பினர்.
என்னுடன் நீ பேசினால் வாய்
முத்துதிர்ந்து விடுமோ
உனை எந்நேரமும்
நினைந்துருகு மென்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ
என்று மக்கள் அன்றாடம் பேசும் பேச்சு மொழிச் சொற்களைச் சிவன் இப்பாடலில் பயன்படுத்தி இப்பாடலைப் பண்படுத்தினார்
தலைவனும் தலைவியும் ஆறடிதூரம் நின்றே காதல் வசனம் பேசிய நாற்பதுகளில் சங்க இலக்கிய அகப் பாடல் மரபில் காதலை ஆண் தாகத்தோடு வெளிப்படுத்துமாறு
உன்னை நயந்து நான் வேண்டியுமோர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ ஒரு பிழையறியா என் மனம் மலர்க்கணை
பாய்ந்து
அல்லல் படுமோ
என்ற வரிகளைப் பாகவதர் பாடி நடித்தபோது ஏதோ ஒரு புது யுகத்திற்கான தொடக்கம் என்றே ரசிகர்கள் கருதிச் சுவைத்தனர்
அன்றும் இன்றும் என்றும்
ரீ மிக்ஸ்என்ற பெயரில் இன்றும் 80 வருடம் கழிந்த பின்னும் எம்.கே.டியின்மன்மத லீலை வென்றார் உண்டோ?“ பாடல் நவீன இசைக் கருவிகளின் உதவியில் வெவ்வேறு படங்களில் இடம் பெறுவதைக் பாட டி.ஆர். ராஜ குமாரி ஆட நாற்பத்து நான்கில் நல்ல திரைக்காவியமாகஹரிதாஸ்உருவானது.  “ஹரிதாஸ்“  படத்தில் வந்த குதிரை ராசியானதென்று சொந்தமாக வாங்கி எம்.கே.டி பயன்படுத்தினார்.
கிருஷ்ணனின் அழகைஹரிதாஸில்பாபநாசம் சிவன் உதவியோடு பாதாதி கேசமாய் வர்ணித்து, கிருஷ்ணனின் லீலைகளை வரிசையாய் அடுக்கி தன் வெண்கலக் குரலில் அற்புதமாகப் பாடினார்.
கிருஷ்ணாமுகுந்தா முராரே
கிருஷ்ணாமுகுந்தா முராரே (ஜெய)
கருணா ஸாகர கமலா நாயக
கனகாம்பர தாரிகோபாலா
காளிய மர்தன கம்ஸநிஷூதன
கமலாயத நயன கோபாலா
குடில குந்தனம் குவலய தளநீலம்
மதுர முரளிரவ லோலம்
கோடி மதன லாவண்யம் கோபீ
புண்யம் பஜாமி கோபாலம்
கோபிஜன மனமோஹன வ்யாபக
குவலய தள நீலகோபாலா
கருணைக் கடலாக, கமலத்திலே உரையக் கூடிய திருமகளின் நாயகனாகக் காளிங்கனை வதம்செய்து நர்த்தனம் செய்தவனாக, கம்சனைக் கொன்றவனாகத் திகழும் கோபாலாஎன்று சிவன் எழுதி,
    குடில குந்தனம் குவலயதளநீலம்
    மதுர முரளிரவ லோலம்
    கோடி மதன லாவண்யம்
    கோபீ புண்யம் பஜாமி
என்று பாகவதர் பாடிய போது ரசிகர்கள் மெய் சிலிர்ந்துப் போனார்கள்.
தாயை மறந்த தனயன்
    “ஹரிதாஸ்திரைப்படத்திலே தந்தை தாயைப் புறக்கணித்த இளைஞன் தன்னை நொந்து பாடுவதாக அமைந்த பாடல் அனைவரையும் நெகிழ வைத்தது.
    ஈரைந்து மாதங்கள் கருவிலே சுமந்து, பாலூட்டி அன்பை ஊட்டி வளர்த்த பெற்றோரைக் கவனிக்காது இருந்த பாவத்தைத் தீர்க்கப் பாகவதர் பாடுகிறார்.
    “என் உடல் தனிலொரு மொய்த்த போதுங்கள்
    கண்ணில் முள்தைத்தாற் போல் துடித்து
    உன் உடல் நோய் கண்டிரவொடு பகலும்
    கண் உறங்காதுடலிளைத்தும்
    இன்ன முதூட்டி இன்பத்தாலாட்டி
    என்னை ஆளாக்கிய பெருமைக்கு என்னிடம் இயற்கையில்    
உங்கள் உள்ளுருகும் அன்பினுக்கு ஒரு கைம்மாறேது
    என் அருட் கடவுளம்மையே அப்பா
    இம்மையில் எனது கண் கண்ட
    என் அருட் கடவுளம்மையே அப்பா
    எனக்கொரு நற்கதியுண்டோ
    என் அரும் நிதியாம் அம்மையே அப்பா
    என் பிழை பொறுத்தருள்வீரோ
    என் உயிர் துணையாம் அம்மையே அப்பா
    எங்கு சென்றுங்களைக் காண்பேன்
    அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்
    அறிவில்லாமலே நன்றி மறந்தேன்
    தாயே தந்தையே என் அருமைத் தாயே தந்தையே
என்று செய்த தவறுக்காகப் பெற்றோரிடம் மனமிரங்கிப் பாகவதர் பாடுகிறார்.
    “ஹரிதாஸ்படத்திலே பாபநாசம் சிவின் பாகவதருக்காக எழுதியிருந்தார்.
    “அன்னையும் தந்தையும் தானே பாரில்
    அண்டசராசரம் கண் கண்ட தெய்வம்
    தாயினும் கோயிலிங் கேது
    ஈன்ற தந்தை சொல் மிக்கதோர் மந்திரமேது
என்று பாகவதர் மனமுருகிப் பாட,
    “சேயின் கடன் அன்னை தொண்டு
    புண்ணிய தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலமும் இதில் உண்டு
    தாயுடன் தந்தையின் பாதம்
    என்றும் தலைவணங்காதவன் நாள் தவறாமல்
    கோயிலில் சென்று என்ன காண்பான்?
    நந்த கோபாலன் வேண்டும் வரம் தருவானோ!
    பொன்னுடன் ஒண்பொருள் பூமி
    பெண்டிர் புத்திதரும் புகழ் இத்தரை வாழ்வு
    அன்னை பிதாவின்றி ஏது?
    மரம் ஆயின் விதையின்றி காய் கனி ஏது,
என்ற கருத்தான பாடலைஹரிதாஸ்திரைப்படத்தில் பாகவதர் பாடினார்.  தாய் தந்தை அன்பைப் புறக்கணித்த இளையோர் கூட்டம் வருந்துமாறு, வருந்தித் திருந்துமாறு பாகவதர் ஹரிதாஸில் நடித்திருந்தார்.