வெற்றி

அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தும் வல்லமை, கலை பாயும் இசைக்கு உண்டு
    சப்தஸ்வரங்களின் இசைப் பிரவாகத்திற்குநகையே, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் எனும் எண் வகை மெய்ப்பாடுகளையும் உருவாக்கும் ஆற்றல் உண்டு.
    இசைக்கு மயங்காதோர் யார்? காற்றில் கலந்து கீதம், செவிக்குள் நுழையும் போது சொக்கிப் போகிறதே எந்தச் சோக மனமும் !
    தன் வெண்கலக் குரலால் யாவரையும் சொக்க வைத்து, ஒப்பற்ற நடிப்பாற்றலால் அனைவரையும் நிற்க வைத்து, நடித்த படங்களை எல்லாம் தொணணூறு வருடங்களுக்கு முன்பே இலட்சக் கணக்கில் விற்க வைத்த பெருமை M.K.T என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பெற்ற
    மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதரைத்தான் சாரும்.
    1934ஆம் ஆண்டு வெளிவந்த பவளக்கொடியிலே தொடங்கி 1959 ஆம் ஆண்டு வெளியானசிவகாமிவரை 25 ஆண்டுகள் அமர காவியங்கள் படைத்த அற்புதக் கலைஞர் M.K.தியாகராஜ பாகவதர்.