சிவன்

பாகவதரும் பாபநாசம் சிவனும்

    முறைப்படிக் கர்நாடக சங்கீதம் பயின்றவர் பாகவதர், ஆலந்தூர் வெங்கடேச ஐயரிடம் முறைப்படி இசை கற்ற பாகவதர், பாபநாசம் சிவன் வீட்டிற்குச் சென்றுப் பாயில் அமர்ந்து பாட்டு கற்றிருக்கிறார்.
    அவரது கர்நாடக சங்கீதஞானம் தமிழ்த்திரையிசையைக் கட்டிப் போட்டது.
    ஊனை உருக்கி, உள்ளொளி பெருக்கி, தேனைத் தந்த சுவை மிக்க பாடல்களை அவருக்காகவே பாபநாசம் சிவன் எழுதினார்.
    திருநீலகண்டர் திரைப்படமே இவ்விருவரின் வெற்றிக் கூட்டணிக்கு அருமையான சாட்சி.
    “ஓடு காணாமல் போய்விட்டது“.  இது பாபநாசம்  சிவனுக்குத் திருநீலகண்டர் திரைப்படத்தின் பாடல் எழுத வழங்கப்பட்ட ஒற்றை வாக்கியக் கரு.
    உள்வாங்கிக் கொண்ட பாபநாசம் சிவன், பாடுவதற்குக் கடினமான சங்கதிகளை மெட்டுக்குக் கட்டுப் பட வைக்கிறார்.
    எப்படிப் போட்டாலும், பாகவதர் பாடி முத்திரை பதிப்பார் என்று தெரியும் சிவனுக்கு.     ஓடு தொலைந்த மாயம் எப்படி நிகழ்ந்தது!
    மறைவாய் புதைத்த ஓடு மறைந்த மாயம்
    மாமுனிவரே அறியேன் யாருமறியாமல்
பாபநாசம் சிவனின் பாடலை, வெண்கலக்குரலால் பாடுகிறார் பாகவதர்
    கரையான் தின்றதோ? கள்வர் கவர்ந்து சென்றாரோ?
    பேதைச் சிறியேன் செய்த தீ வினையோ?
    இறைவன் சோதனையோ
பாகவதர் அடுக்கிக் கொண்டே போகிறார்.  அடுத்த அடியில் இறைவனோடு பேசுகிற ‘பாவம்‘ வந்தாக வேண்டும்.
கண் மருள்தீர் மெய்த்தவ ஞானப் பெரியோய்
போதை யான் மெய்யாய் வடிவலேறிய நெஞ்சில்
வஞ்சம் அறியேன் ஐயா கருணை புரிவீர்
மன்னித்தருள்வீர்களிமண் சுட்ட கலம் போனாலென்ன? “செம்பொற்கலமே செய்து தருவேன்“ என்று எம்.கே.டி. பாடி முடித்தபோது பாகவதரின் பேராற்றல் கண்டு பாபநாசம் சிவன் மெய்சிலிர்த்துப் போனார்.  நடிகரே பாடகராகவும் திகழ்ந்ததால் நவரசங்களை அவரால் குரல் வழியேயும், முகபவத்திலும் மிகத் திறமையாகத் தர முடிந்தது.